Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் குறித்த தகவல் வழங்கிய நபரின் தலையை பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன்வைக்க ஒப்பந்தம்

போதைப்பொருள் குறித்த தகவல் வழங்கிய நபரின் தலையை பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன்வைக்க ஒப்பந்தம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒருவரைக் கொலை செய்து, அவரது தலையை, குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன் வைக்கும் ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற கூலிப்படை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கிரிந்த கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

அதன் அப்போதைய பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இது கைப்பற்றப்பட்டது.

இதன்போது 7 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த போதைப்பொருள் தொகுதி தற்போது டுபாயில் மறைந்திருக்கும் ‘அங்கொடை பிரியந்த’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமையால் அவர் பொலிஸார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அதற்கமைய, ரொஹான் ஓலுகலவுக்குத் தகவல் வழங்கியது யார் என்பதை குறித்த கடத்தல்காரர் தேடிக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒற்றர் பற்றிய தகவலை அறிந்த பின்னர், அவரைக் கொலை செய்து அவரது தலையை ஓலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் ஒப்பந்தத்தை பாதாள உலகக் கும்பல் ஒன்றிடம் ‘அங்கொடை பிரியந்த’ ஒப்படைத்துள்ளார்.

இதற்கிடையில், பாதாள உலகக் கும்பல் தன்னைத் தேடுவதை அறிந்த ஒற்றர், தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்குப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொலை ஒப்பந்தத்தைப் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!
செய்திகள்

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!

October 24, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

October 24, 2026
அக்குரேகொட இரட்டைக் கொலை;  துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து முடக்கம்!
செய்திகள்

அக்குரேகொட இரட்டைக் கொலை;  துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து முடக்கம்!

October 24, 2026
பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, ஐவர் காயம்; இனவாதத் தாக்குதல் என மக்ரோன் கண்டனம்!
உலக செய்திகள்

பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, ஐவர் காயம்; இனவாதத் தாக்குதல் என மக்ரோன் கண்டனம்!

October 24, 2026
விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!

October 24, 2026
வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
உலக செய்திகள்

வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

October 24, 2026
Next Post
சட்டவிரோத பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோத பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு