Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்பின் உலகளாவிய வரி 10% ஆகக் குறைப்பு

ட்ரம்பின் உலகளாவிய வரி 10% ஆகக் குறைப்பு

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உலகளாவிய சுங்கவரி சதவீதம் நேற்று (24) முதல் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய உலகளாவிய பரஸ்பர சுங்கவரி சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தமையே இந்த சுங்கவரி மாற்றத்திற்குக் காரணமாகும்.

அமெரிக்காவின் சுதந்திர தினமாகக் குறிப்பிட்டு, இந்த உலகளாவிய பரஸ்பர சுங்கவரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தினார்.

எவ்வாறாயினும், குறித்த சுங்கவரியை அறிமுகப்படுத்தியதில் ஜனாதிபதி தனது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம், குறித்த வரிகள் சட்டவிரோதமானவை என அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று மணித்தியாலங்கள் முடிவடைவதற்கு முன்னரே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீத உலகளாவிய சுங்கவரி விதிக்கப்படும் என வலியுறுத்தினார்.

பின்னர் அந்த சுங்கவரியை 15 சதவீதமாக அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்தார். சுங்கவரி தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைத் தவிர்க்க முற்படும் நாடுகள் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களின்படி, இன்று முதல் 10 சதவீத சுங்கவரி மாத்திரமே அமுல்படுத்தப்படவுள்ளது.

1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 122 ஆவது பிரிவின் பிரகாரம், காங்கிரஸின் அனுமதியின்றி 150 நாட்களுக்கு வரியை விதிப்பதற்காக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க காங்கிரஸில் ஜனாதிபதி ட்ரம்ப் ஆற்றும் வருடாந்த உரை இன்று நடைபெறவுள்ளதுடன், இதன்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் புதிய சுங்கவரி தொடர்பில் ஜனாதிபதி மேலதிக கருத்துகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு