Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (25) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

அரையிறுதிச் சுற்றுக்கான நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின், இலங்கை அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

இப்போட்டிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனையாகி முடிந்துள்ளதால், பிரேமதாச விளையாட்டரங்கின் நுழைவாயில்கள் பிற்பகல் 4 மணிக்கே திறக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இம்முறை டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணி பங்கேற்ற தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 51 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன் காரணமாக, அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

இப்போட்டிக்காக இரு அணிகளும் நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டன.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை 28 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், அதில் 16 போட்டிகளில் நியூசிலாந்தும், 9 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 6 டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், அதில் 3 போட்டிகளில் நியூசிலாந்தும், 2 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கிடையே, இன்று நடைபெறும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டியைப் பார்வையிட அதிகளவிலான இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இது தொடர்பில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப் பொலிஸார் தற்போது தீர்மானித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!

September 4, 2026
வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை
செய்திகள்

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

September 4, 2026
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

September 4, 2026
Next Post
அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு