சமீபத்தில், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு போர் சூழ்நிலையில் “ஈரானின் ஓவிய விமானத்தை வெடி வைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அழித்தனர் (painted plane)” என சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த செய்திகள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன,
ஈரான் தனது வான்படைத் தளங்களில் உண்மையான F-14 போர் விமானங்கள் நிற்பது போன்ற தத்ரூபமான 3D ஓவியங்களைத் தரையில் வரைந்திருந்தது. அதிநவீன செயற்கைக்கோள் மற்றும் வான்வழி உளவுப் பார்வையில் இவை உண்மையான விமானங்கள் போலவே தோற்றமளித்தன.

தாக்குதலின் போது அமெரிக்கப் படைகள் இந்த ஓவியங்கள் மீதே குண்டுகளை வீசி அழித்துள்ளன. இதன் மூலம் ஈரானின் விமானங்கள் அழித்துவிட்டதாக அமெரிக்கத் தரப்பில் நம்பப்பட்டது. ஆனால், உண்மையில் ஈரானின் போர் விமானங்கள் ஏற்கனவே நிலத்தடி பதுங்கு குழிகளுக்கு மாற்றப்பட்டுப் பாதுகாப்பாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.








