Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கத்தார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்; பாதுகாப்பு எச்சரிக்கை தீவிரம்!

கத்தார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்; பாதுகாப்பு எச்சரிக்கை தீவிரம்!

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கத்தாரின் ராஸ் லஃப்பான் பகுதிக்கு அருகே நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.

ராஸ் லஃப்பானுக்கு கிழக்கே சுமார் 4 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது மர்மப் பொருள் ஒன்று கப்பலின் மீது மோதித் தாக்கியுள்ளதாக UKMTO தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியில் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் காணப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹோர்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கட்டார் கடல் எல்லைக்கு அருகே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் முறியடிப்பு; 40 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு!

கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் முறியடிப்பு; 40 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு