Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

3 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (18) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நேற்று காலை கொடிச்சீலையானது கடல் நச்சியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலயகத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

சுமார் 500வருடங்களுக்கு மேல் பழமையான இந்த ஆலயமானது கிழக்கு மாகாணத்தில் பழமையானதும் தொன்மையானதுமான ஆலயங்களுல் ஒன்றாகவும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் உள்ளது.

ஆலயத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று, கொடிச்சீலையும் உற்சவ மூர்த்தியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

கொத்தம்பத்தில் நடைபெற்ற விசேட பூஜைகள் வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடனும் நாத வேதபராயணம் முழங்க மேளதாள இசையுடனும் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கணேசாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் நடன ஆற்றுகையும் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா நடைபெற்றது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். தினமும் தம்ப பூஜை, வசந்த மண்டபபூஜை, சுவாமி உள்வீதி, வெளிவீதியுலா நடைபெறும்.

குறிப்பாக முக்கிய திருவிழாக்களான மாம்பழத் திருவிழா, திருவேட்டைத் திருவிழா 31ஆம் திகதி தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன், மறுநாள் 01ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவமும் பொன்னூஞ்சலும் நடைபெற்று கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.

மஹோற்சவ கால கிரியைகள் அனைத்தும் பிரம்மஸ்ரீ நித்திய சிவானந்தக்குருக்கள் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இருவர் கைது

1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு