பண்டாரவல, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தம்பிட்டிய பகுதியில் இரண்டு மாடி கொண்ட வீட்டின் கூரையில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று (31) கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் கவனக் குறைவினால் இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளுது.
விபத்தில் படுகாயமடைந்தரை பண்டாரவல வைத்தியசாலையில் சேர்த்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 49 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








