Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிக் டொக்கில் மூழ்கிக்கிடந்த தனது 13 வயது மகனுக்கு இரும்புக்கம்பியால் சூடுவைத்த தந்தை

டிக் டொக்கில் மூழ்கிக்கிடந்த தனது 13 வயது மகனுக்கு இரும்புக்கம்பியால் சூடுவைத்த தந்தை

4 months ago
in செய்திகள்

தெனியாய பகுதியில் பாடசாலைப் பாடங்களைப் படிக்காமல், கையடக்க தொலைபேசியில் டிக் டொக் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை, அவரது தந்தையே சூடான இரும்புக்கம்பியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.

இந்த கொடூர செயலைச் செய்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் வேலைக்குச் சென்ற தந்தை தனது கையடக்க தொலைபேசியை வீட்டில் மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதனைப் பயன்படுத்திய சிறுவன் நீண்டநேரம் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட தந்தை, கடும் கோபத்தில் இரும்புக்கம்பியால் சிறுவனை சுட்டுள்ளார்.

மறுநாள் காயங்களுடன் பாடசாலைக்குச் சென்ற சிறுவன், ஆசிரியர்களிடம் விபரத்தைக் கூறியுள்ளார்.

அதிபர் உடனடியாகச் சிறுவனை மீட்டுத் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த தெனியாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன அமரத்ன தலைமையிலான குழுவினர், அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனின் தாய் நீண்டகாலமாகப் படுக்கையிலிருந்த நிலையில், அந்த வீட்டில் ஒருவேளை உண்பதற்கு உணவு கூட இல்லாமல் இருந்துள்ளது.

பிள்ளைகளின் மற்றும் நோயுற்ற தாயின் அவல நிலையைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள், தங்களுக்குள் பணத்தைச் சேகரித்து அந்த குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் சில நாட்கள் தலைமறைவாக இருந்த தந்தையைத் தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், தெனியாய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
Next Post
இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்; மத்திய பகுதியில் விழுந்து வெடித்ததில் பதற்றம்!

இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்; மத்திய பகுதியில் விழுந்து வெடித்ததில் பதற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு