Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீத வரி; ஜூலைக்கு ஒத்திவைப்பு

டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீத வரி; ஜூலைக்கு ஒத்திவைப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

VAT சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியோகபூர்வ திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எழுப்பியுள்ள கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மின்-வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் நிதிநுட்பம் போன்ற சேவைகள் இந்த வரி வலைக்குள் கொண்டுவரப்படவுள்ளன.

ஆரம்பத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 1 முதல் இந்த வரி அமுல்படுத்தப்படவிருந்தது. பின்னர் அது ஏப்ரல் 1 வரை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ஜூலை 1 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் இந்த வரி அமுல்படுத்தப்படும் பட்சத்தில், டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்கும் உலகின் சுமார் 120 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணையவுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையினர் இந்த வரியின் எல்லைகள் குறித்து எழுப்பியுள்ள சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரே இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
Next Post
இலங்கையில் கட்டுமான பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் கட்டுமான பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு