Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருக்கோணஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா

திருக்கோணஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை தட்சண கயிலாயம் என அழைக்கப்படும் திருக்கோணஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உபயமாக நான்காம் நாள் திருவிழா இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களை அழைத்து திருவிழா திறம்பட நடாத்தப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான ​சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.குகதாசன் மற்றும் தனவந்தர்கள், பேரவை பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

​மட்டக்களப்பு மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த உற்சவத்தில், விசேட அபிஷேக ஆராதனைகளும், சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவும் இடம்பெற்றதுடன் பக்தர்களின் “அரோகரா” கோஷங்களுக்கு மத்தியில், திருக்கோணஸ்வரப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு நாவற்குடா இசை நடனக் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களின் யோகா நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அதிதிகளால் நிகழ்வுகள் வழங்கியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

​திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களுக்குமிடையிலான ஆன்மீக மற்றும் கலாசார பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் உற்சவம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
Next Post
வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெறும் கைதி சிறைச்சாலை பெண் வைத்தியரிடம் அத்துமீற முயற்சி

வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெறும் கைதி சிறைச்சாலை பெண் வைத்தியரிடம் அத்துமீற முயற்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு