யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல்,கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேசசெயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயேஅமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த விசேட கூட்டம்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








