Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியினால் உண்மை வெளிவரும்; பிள்ளையான் நம்பிக்கை!

ஜனாதிபதியினால் உண்மை வெளிவரும்; பிள்ளையான் நம்பிக்கை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றபடியால் அது தொடர்பில் விசாரித்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்யவே விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். எனவே, இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உண்மையைத் தெளிவுபடுத்தும் என்று நான் நம்புகின்றேன்.”

இவ்வாறு இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ‘சனல் 4’ தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவை நியமித்துள்ளார். விசாரணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சீ.எம்.ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ச ஏ.ஜே.சோசா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ‘சனல் 4’ தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் ஒருவரான இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆஸாத் மௌலானா என்ற நபர், இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும், தான் வெளிநாட்டில் தஞ்சம் அடைவதற்குமே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ‘சனல் 4’ தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். இதை ஊதிப்பெருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஐ.எஸ். என்றால் என்ன?, அந்தத் தீவிரவாத அமைப்பினர் ஏன் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்? என்பதை சாதாரண அறிவு உள்ளவர்களே புரிந்துகொள்ள முடியும். எனினும், மக்கள் சிலர் தெளிவு இல்லாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உண்மையைத் தெளிவுபடுத்தும் என்று நான் நம்புகின்றேன்.

நான் சிறையில் இருக்கும்போதே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த குழுக்களிடம் சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளேன். எனவே, ‘சனல் 4’ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மையைத் தெளிவுபடுத்த ஜனாதிபதி நியமித்துள்ள விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்க நான் தயங்கமாட்டேன்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
Next Post
பிள்ளையான் மீது ஜனா எம்.பி குற்றச்சாட்டு!

பிள்ளையான் மீது ஜனா எம்.பி குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.