Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

60 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே, இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வன்செயல்களில் ஈடுபடும் தரப்பினர் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் தனது X சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலை நடத்துவதற்காக சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கரவண்டி ஒன்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, குறித்த தாக்குதல் இலக்கு மாறி இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் தந்தையின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே தாக்குதலாளர்கள் வந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடு மாறியிருந்தமை காரணமாக தவறான வீடு இலக்காகி, இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் சடலங்களும் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.