ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல, அவர்கள் தீவிரவாதிகள் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் தற்போது இலங்கை குடியுரிமை கோருவதாகவும், அவர்களுக்கு இலங்கையில் அடைக்கலம் வழங்குவதை தாம் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ்., போக்கோ ஹராம் மற்றும் ஹூதி போன்ற தீவிரவாத அமைப்புகளைப் போன்றதொரு குழுவை இலங்கையில் உருவாக்குவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் பொலிஸார் மற்றும் பௌத்த விகாரைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியே ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியைக் கொண்டதாகத் தாம் கருதும் குழுவினருக்கு இலங்கையில் அடைக்கலம் வழங்குவதை கண்டிப்பதாகவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.







