Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

41 minutes ago
in மட்டு செய்திகள்

மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (12) மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) இராஜதுரை அரங்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களால் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கல்விச் சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண செயலாளர், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ உதவிகள், அத்தியாவசிய உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு