Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகவியலாளர் மர்ஹூம் கலாபூசணம் சலீம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஊடகவியலாளர் மர்ஹூம் கலாபூசணம் சலீம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அண்மையில் காலமான கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மர்ஹும் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, முஸ்லிம் கல்வி சமூக ஆய்வு நிறுவன (MESRO ஶ்ரீலங்கா) ஏற்பாட்டில் அமைப்பின் நிறுவுனரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் தலைமையில் நேற்று (11) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹும் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் பற்றிய நினைவுரைகளை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸீல், சுகாதார சுதேச வைத்தியத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.டி. ஹசன் அலி, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், சம்மாந்துறை பிரதேச சபை பதில் தவிசாளர் வெள்ளையன் வினோகாந், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி.எம். பைரூஸ், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் மீரா எஸ் இஸ்ஸதீன், மெஸ்ரோ ஸ்ரீலங்காவின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். நஸீல், ஓய்வு பெற்ற அதிபர் சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா, காத்தான்குடி ஊடக சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீன், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், கலை இலக்கிய பேரவை தலைவர் பொறியியலாளர் எம். இஸ்மாயில் போன்றோர்களினால் அவரைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுப் பதிவுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டது

சலீம் அவர்களின் குடும்பம் சார்பில் ஏற்புரையை மர்ஹூம் “கலாபூஷணம்” ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மகன் முறை உறவினரும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான உதவிக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம். றஸீன் நிகழ்த்தியதுடன் துஆ பிராத்தனையை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இமாம் ஏ.பி.எம். இப்ராஹீம் (ஹாஸிபி) அவர்கள் நிகழ்த்தினார்.

“அழியாத எழுத்து, மறையாத நினைவு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், சபை நிறைந்த அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், ஊடக அமைப்புகளின் நிர்வாகிகள், கல்விமான்கள், சமூக பிரமுகர்கள் எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வை சிலோன் டைம்ஸ் நெட்வொர்க் முகாமையாளர் சி.எம்.யூ. தாரீக் தொகுத்து வழங்கினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு

October 21, 2026
கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
செய்திகள்

கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே

October 21, 2026
திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
செய்திகள்

திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி

October 21, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
Next Post
கரடியனாறு புதையல் தோண்டிய சம்பவத்தில் உதவியாக இருந்த குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி கைது

கரடியனாறு புதையல் தோண்டிய சம்பவத்தில் உதவியாக இருந்த குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.