Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கரடியனாறு புதையல் தோண்டிய சம்பவத்தில் உதவியாக இருந்த குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி கைது

கரடியனாறு புதையல் தோண்டிய சம்பவத்தில் உதவியாக இருந்த குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி கைது

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 4 பேரை கைது செய்த சம்பவம் தொடர்பாக மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி உட்பட மேலும் இருவரை நேற்று சனிக்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

செங்கலடி பதுளை வீதியில் உள்ள பெரிய புல்லுமலை பிரதான வீதியில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றில் சம்பவ தினமான சனிக்கிழமை அதிகாலை தொல்பொருட்களை தேடும் நோக்கில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து விசேட நடவடிக்கைக்காக மகாஓயா அதிரடிப்படை முகாமிற்கு இணைக்கப்பட்டு கடமையாற்றி வரும் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட உறுகாமம், பெரிய புல்லுமலை பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேரை பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிளிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு உதவிய விசேட நடவடிக்கைக்காக இணைக்கப்பட்டிருந்த மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படை வாகன சாரதியான கான்ஸ்டபிள் ஆகிய இருவரும் இந்த சட்ட விரோத செயலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 3 விசேட அதிரடிப்படையினர், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், 2 பொது மக்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்;.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
Next Post
நிலக்கரி பற்றாக்குறை செலவுகளை மின்கட்டணத்தில் சேர்க்காதிருக்க தீர்மானம்

நிலக்கரி பற்றாக்குறை செலவுகளை மின்கட்டணத்தில் சேர்க்காதிருக்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு