கனடாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் , பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள அந்தக் கட்சி, பாராளுமன்றத்தின் கீழ்சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
343 இடங்களை கொண்ட கனடா பாராளுமன்றத்தில், லிபரல் கட்சி தற்போது 174 இடங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், அரசாங்கத்தை நிலைத்தன்மையுடன் முன்னெடுக்க தேவையான எளிய பெரும்பான்மையை கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.








