எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல் மற்றும் இணையதள கசிவு போன்ற அடுத்தடுத்த பின்னடைவுகளைச் சந்தித்தது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய இப்படம், எதிர்பாராத விதமாக முழுமையாக இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் 6 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
தற்போது அனைத்து தடைகளையும் தாண்டி, இப்படத்தை வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்த இறுதிக்கட்ட முடிவெடுக்க நாளை விநியோகஸ்தர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில், விஜய்யின் இந்த கடைசி திரைப்படம் ஏப்ரல் இறுதியில் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது








