Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரன் விக்ரமரத்ன ஒரு இடைக்காலக் குழுவில் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின்றன.

கிரிக்கெட் தலைவரின் ராஜினாமாவைக் கோரி வீரர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு இணங்க, ஒரு கடுமையான நடவடிக்கையாக, ஷம்மி சில்வாவை விரைவில் ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவருக்குத் தெரிவித்துள்ளார் எனத் தெரியவருகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக அரசியல் செல்வாக்கு மற்றும் முறைகேடான அதிகாரப் பலத்தின் மூலம் தலைவர் பதவியில் நீடித்துவந்த ஷம்மி சில்வா, தற்போது தனது பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் நிறைந்த நிர்வாக மாற்றத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) அறிவித்துள்ளதாகவும், இது ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதால் அதற்கு ICC அனுமதி வழங்கியுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

நிதி முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்ததாக ஷம்மி சில்வா மீது கடந்த காலங்களில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்கு ஷம்மி சில்வா விவகாரமே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னிணியில், ஓய்வுபெற்ற நீதியரசர்கள் மற்றும் தணிக்கையாளர் நாயகத்தின் பல விசாரணை அறிக்கைகள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பாரிய மாற்றத்தைக் கோரியிருந்த நிலையில், தற்போது அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமது தேர்தல் வாக்குறுதிக்கமைய அரச நிறுவனங்களைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனாதிபதி இதனைச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.

வெளி உலகைச் சந்திப்பதற்கு முன்பு, மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்குமாறு அவர் ஜனாதிபதி திசாநாயக்கவிடம் கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மீண்டும் பிரான்சில் வெடித்த போராட்டம்; சுமார் 1,000 பேர் கைது
உலக செய்திகள்

மீண்டும் பிரான்சில் வெடித்த போராட்டம்; சுமார் 1,000 பேர் கைது

October 25, 2026
ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது

October 25, 2026
ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!
செய்திகள்

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!

October 25, 2026
ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா

October 25, 2026
ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு
செய்திகள்

ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு

October 25, 2026
விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

October 25, 2026
Next Post
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.