Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பில் பட்டத்திருவிழா

சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பில் பட்டத்திருவிழா

5 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை கவரும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்ட நடைபாதை,சூரிய மின் தொகுதி என்பன திறந்துவைக்கப்பட்டதுடன் பட்டத்திருவிழா மற்றும் பௌர்ணமி கலை விழா என்பன நேற்று (27) மாலை நடாத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா,பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், ,மாநகரசபை உத்தியோகத்தர்கள், கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாநகரசபையினால் நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நடைபாதை திறந்துவைக்கப்பட்டதுடன் சூரிய சக்தியினால் இயங்கும் மின் ஒளி தொகுதியும் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது பட்டக்கலைஞர்கள் பங்குகொண்ட பட்டத்திருவிழாவும் நடாத்தப்பட்டதுடன் இதன்போது 11பட்டக்கலைஞர்களின் பட்டங்கள் பறக்கவிடப்பட்டதுடன் இதில் மூன்று பட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மாநகரசபையும் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலை விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையிலும் கல்லடி கடற்கரைக்கு அதிகளவான மக்கள் பொழுதினை கழிக்க வரும் நிலையிலும் அவர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்க்ள தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

September 19, 2026
அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!
செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!

September 19, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
Next Post
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் கைதான பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் கைதான பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு