Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக்குகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள்; மகா நாயக்க தேரர்கள் அதிரடி அறிவிப்பு

பிக்குகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள்; மகா நாயக்க தேரர்கள் அதிரடி அறிவிப்பு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிக்குகள் குழுவினர், மகா நாயக்க தேரர்களின் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி தாய்லாந்திற்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு மகா நாயக்க தேரர்களின் எழுத்து மூல அனுமதி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த நடைமுறையை அரசாங்கம் அண்மையில் நீக்கியிருந்தது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன,

“பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு மகா நாயக்க தேரர்களின் அனுமதியைப் பெறும் நடைமுறை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறித்த கட்டுப்பாட்டு முறையை மீண்டும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு மகா நாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையைத் தாம் வெளிவிவகார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், இந்த கடத்தல் குழுவை வழிநடத்தியதாகக் கருதப்படும் பிரதான பிக்கு கம்பஹா, மீகஹமுல்ல பகுதியில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் அவருக்கு மே மாதம் 2 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், அவர் விசாரணைகளுக்கு உரிய முறையில் ஒத்துழைக்க மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
பிரபல ஹோட்டலுக்குள் உணவு தேடிச் சென்ற 13 அடி நீள முதலை!

பிரபல ஹோட்டலுக்குள் உணவு தேடிச் சென்ற 13 அடி நீள முதலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.