Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

6 months ago
in செய்திகள்

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு (Tuition Class) ஆசிரியர் ஒருவர் புதன்கிழமை (29) அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரொன்றையும் லக்கல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர், மாணவிகளை மாத்தளை – நக்கிள்ஸ் (Knuckles) சூழல் பகுதிக்கு அழைத்து சென்று, தனது வாகனத்திற்குள்ளேயே வைத்து அவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பல தகவல்கள் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறித்த ஆசிரியரை மாணவியொருவரின் தந்தை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடொன்று கிடைத்துள்ளது. அந்த முறைப்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து விரிவாக விசாரணை செய்தபோது, அங்கு நடந்த பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

லக்கல, பகமூன மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் மிகவும் பிரபலமானவராக கருதப்படும் இந்த ஆசிரியர், தனது பிரத்தியேக வகுப்புகளுக்கு வரும் மாணவ – மாணவிகளுக்கு இடையே காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி ஆசிரியரும் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!
செய்திகள்

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!

October 23, 2026
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்
செய்திகள்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்

October 23, 2026
மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!
உலக செய்திகள்

சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!

October 23, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!

October 23, 2026
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

October 23, 2026
Next Post
ரயில் பாதை திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

ரயில் பாதை திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு