Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் கடத்திய 22 தேரர்கள்; பிரதான சூத்திரதாரிகளான இரு தேரர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி!

போதைப்பொருள் கடத்திய 22 தேரர்கள்; பிரதான சூத்திரதாரிகளான இரு தேரர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம் பிக்குகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக இரு தேரர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 2 தேரர்களும் தாய்லாந்தில் தங்கியிருந்தவாறு இந்த போதைப்பொருள் வலையமைப்பை முன்னெடுத்து வந்துள்ளமை இதுவரையிலான விசாரணையில் தெரியவந்துள்ளதாக போதைப்பொருள் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவியோடு இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரை அணுகி குறித்த இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹெஷ் ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்களினதும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அவர்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் 19 தேரர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையிலான விசாரணைகளில், 22 இளம் தேரர்களை தாய்லாந்துக்கு அனுப்புவதுக்கு அனைத்து ஒருங்கிணைப்பு வசதிகளையும் முன்னெடுத்ததாகக் கூறப்படும் தேரர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இதனைவிட மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தாய்லாந்து சென்ற தேரர்களுக்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் ஏனைய செலவுகள் தொடர்பாக அனுசரணை வழங்கியதாகக் கூறப்படும் பிரபல வர்த்தகர் ஒருவர் தொடர்பாகவும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
மட்டு ஆரையம்பதியில் ஒரு வயது மகளுக்கு புண்ணை தோண்டி தீர்த்திய தந்தை 2300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

மட்டு ஆரையம்பதியில் ஒரு வயது மகளுக்கு புண்ணை தோண்டி தீர்த்திய தந்தை 2300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு