Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முருங்கை விதைகள் குறித்த புதிய கண்டுபிடிப்பு

முருங்கை விதைகள் குறித்த புதிய கண்டுபிடிப்பு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“அதிசய மரம்” என அழைக்கப்படும் முருங்கை மரத்தின் விதைகளுக்கு, குடிநீரில் உள்ள PVC மைக்ரோபிளாஸ்டிக் (நுண்பிளாஸ்டிக்) துகள்களை 98.5% வரை அகற்றும் தனித்துவமான திறன் உள்ளதாக பிரேசில் மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டறிந்துள்ளது

சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையின்படி, நீரைச் சுத்திகரிப்பதற்காகத் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களுக்கு இணையான வினைத்திறனுடன் முருங்கை விதைகள் செயற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முருங்கை விதைகள் ஒரு “உறைவியாக” (Coagulant) செயற்பட்டு, நீரில் உள்ள சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை ஒன்றோடொன்று ஒட்டச் செய்கின்றன. இதன் மூலம் அத்துகள்கள் பெரியதாகி எளிதில் வடிகட்டி அகற்றக்கூடிய நிலைக்கு மாறுகின்றன.

நீரில் பரவலாகக் காணப்படும் தீங்கு விளைவிக்கும் PVC மைக்ரோபிளாஸ்டிக்குகளை அகற்றுவதில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதுடன், மனிதத் தலைமுடியின் தடிமனில் நான்கில் ஒரு பங்கு அளவுள்ள மிகச் சிறிய துகள்களைக் கூட இதன் மூலம் அகற்ற முடிந்துள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் ‘அலுமினியம் சல்பேட்’ போன்ற இரசாயனப் பொருட்களைப் போலன்றி, முருங்கை விதைகள் இயற்கையாகவே மட்கக்கூடியவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நச்சுத்தன்மையற்றவை. அலுமினியம் அதிகளவில் உடலைச் சென்றடைவது நரம்பியல் நோய்கள் ஏற்படக் காரணமாகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒரு முருங்கை விதை மூலம் சுமார் 10 லீட்டர் நீரைச் சுத்திகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நகரங்களின் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு அதிக அளவிலான முருங்கை விதைகள் தேவைப்படும் என்பதால், இந்த முறையானது தற்போது சிறிய சமூகங்களுக்கு அல்லது இரசாயனப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளச் சிரமமான பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

உலகளாவிய ரீதியில் சுமார் 83% குழாய் நீரில் மைக்ரோபிளாஸ்டிக் அடங்கியுள்ளமை 2024 ஆம் ஆண்டு ஆய்வொன்றில் தெரியவந்துள்ள பின்னணியில், இவ்வாறான இயற்கையான தீர்வொன்றைக் கண்டறிவது சுகாதாரத் துறையில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. எதிர்கால ஆய்வுகள் மூலம் ஏனைய பிளாஸ்டிக் வகைகள் மற்றும் மிகச் சிறிய ‘நானோபிளாஸ்டிக்குகளை’ (Nanoplastics) அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.