புத்தளம் – பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் பாலாவி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் 994 கிலோ 150 உலர்ந்த மஞ்சள் புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.

இதன்போது, சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 34 வயதுடைய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.








