வாகரை பிரதேசத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி கட்டுவது தொடர்பான கலந்துரையாடல் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் நேற்று (29.04.2026) மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலானது தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தி .சரவணபவன் மற்றும் உப தவிசாளர் ரசிகரன் உட்பட தமிழரசி கட்சியின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கள விஐயதின் போது வினைத் திறனாக மன்றத்தினை செயற்படுத்துதல் மற்றும் பிரதேச மக்கள் சபை மூலமாக வழங்க வேண்டிய சேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்களால் சபையினால் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சபை எதிர் நோக்கும் பல்வேறு சவால்கள் வரி வருவாய் போதாத நிலை, வருமானத்தை ஈட்டுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.









