Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செயற்கைக்கோள் புகைப்படங்களில் பெயர் உருவாக்கும் நாசாவின் புதிய முயற்சி!

செயற்கைக்கோள் புகைப்படங்களில் பெயர் உருவாக்கும் நாசாவின் புதிய முயற்சி!

4 months ago
in செய்திகள்

நாசா சேகரித்து வைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பெயரை உருவாக்கி பயனர்களுக்கு வழங்கும் முன்னெடுப்பை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் விண்வெளி மற்றும் புவி அறிவியல் தொடர்பான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த நாசா பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றது.

அதன் ஒரு முயற்சியாக சர்வதேச பூமி தினமான ஏப்ரல் 22 ஆம் திகதி, ‘Your Name in Landsat’ (லான்ட்சாட்டில் உங்கள் பெயர்) என்ற மெனுவை தனது வலைதளத்தில் நாசா அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நாசாவின் லான்ட்சாட் துறை மூலமாக பூமியின் இயற்கை புகைப்படங்களை செயற்கைக்கோள்கள் உதவியுடன் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன.

நமது பூமியின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த காடுகள், மலைகள், பாலைவனம் என கோடிக்கணக்கான புகைப்படங்களை நாசா வைத்துள்ளது.

இந்த நிலையில், ‘Your Name in Landsat’ (லான்ட்சாட்டில் உங்கள் பெயர்) என்ற தளத்தில் பயனர்கள் அவர்களின் பெயரையோ, அல்லது அவர்களின் பிரியமானவர்களின் பெயரையோ பதிவிட்டால், எழுத்து வடிவில் உள்ள பூமியின் இயற்கைப் புகைப்படங்களை தொகுத்து பெயராக மாற்றி பயனர்களுக்கு வழங்கும்.

எப்படி உபயோகிப்பது?

கூகுள் போன்ற தேடுதல் தளத்தில் ’Your Name in Landsat’ எனப் பதிவிட்டால், நேரடியாக நாசாவின் ’Your Name in Landsat’ என்ற தளத்துக்கு பயனர்களை கொண்டு செல்லும். https://science.nasa.gov/specials/your-name-in-landsat/

அதில், A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி பெயரை பதிவிட வேண்டும். பின்னர், நீங்கள் பதிவிடும் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் ஒத்திருக்கும் நிலவடிவங்களின் செயற்கைக்கோள் படங்களைத் தானாகவே தேடும்.

சில நொடிகளில், நீங்கள் பதிவிடும் பெயருக்கான முழு வரைப்படத்தையும் நாசா வழங்கும். அதனை பயனர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தற்போது உலகளவில் டிரெண்டிங்கில் இருக்கும் ‘Your Name in Landsat’ அம்சத்தை கோடிக்கணக்கானோர் ஆர்வத்துடன் அணுகி வருகிறார்கள்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர்; புதிய வரலாறு படைத்த ரித்திகா ஸ்ரீ

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர்; புதிய வரலாறு படைத்த ரித்திகா ஸ்ரீ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.