Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர்; புதிய வரலாறு படைத்த ரித்திகா ஸ்ரீ

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவர்; புதிய வரலாறு படைத்த ரித்திகா ஸ்ரீ

1 month ago
in செய்திகள்

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக ரித்திகா ஸ்ரீ பொறுப்பேற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

இது கிரிக்கெட்டில் மிகப் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. அவரது மனஉறுதியால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) மாநில நடுவர் தேர்வு விண்ணப்பங்களில் ‘இதர பாலினம்’ என்ற புதிய பிரிவைச் சேர்த்தது. இது ஆண், பெண் விருப்பங்களுடன் இணைந்து அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.

சேலத்தைச் சேர்ந்த திருநங்கை ரித்திகா, 2021 முதல் சேலம், கோயம்புத்தூர் ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றுகிறார். ஆர்.முத்துராஜ் என்ற பெயரில் பிறந்த இவர், மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்தவர். மொஹாலியில் கால் சென்டரில் இருந்தபோது ஐபிஎல் பார்த்து நடுவராக ஆர்வம் கொண்டார்.

நடுவர் பணிக்கு வழிகாட்டுதல் குறித்து தெரிவித்த ரித்திகா ஸ்ரீ, “சமூக ஊடகங்கள் வழியாக சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை தொடர்புகொண்டேன். நடுவர் குழு தலைவர் யூ.ஜெயராமன் முக்கியமாக வழிகாட்டினார். ஆர்.பார்த்தசாரதி, வி.சாந்தி பூஷன் ஆகியோரும், நடுவர் பணி அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்ததற்காக நன்றி,” என்றார்.

பாலின மாற்றப் பயணத்திற்கு கிடைத்த ஆதரவு பற்றி தெரிவித்த அவர், “ஜெயராமன் ஐயாவும் அவரது மனைவியும் எனது மாற்றக் காலகட்டத்தில் ஆதரவளித்தார்கள். எனது முன்னேற்றம் தடைபடாமல் இருக்க, நடுவராக சில ஆண்டுகள் என்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு பாலின மாற்றம் செய்துகொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்” என்று குறிப்பிட்டார்.

2024-ல் கோயம்புத்தூரில் பாலின மாற்றம் செய்துகொள்ள ரித்திகா முடிவெடுத்தார். சிடிசிஏ லீக்கில் நடுவராகப் பணியாற்ற அங்கு சென்ற அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. “பார்வையாளராகவே செல்ல விரும்பினேன். ஆனால், உள்ளே நுழைய மறுக்கப்பட்டதுடன், மனதைப் புண்படுத்தும் கருத்துகளையும் எதிர்கொண்டேன்,” என அவர் வேதனையுடன் கூறினார்.

“ஒரு மணி நேரம் அழுதுகொண்டே வீடு திரும்பினேன். சண்டையிட்ட பின்னரே சென்றேன். மக்கள் திருநங்கைகளை பிச்சை எடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம், கண்ணியமான வாழ்வாதாரம் தேட எங்களை அனுமதிப்பதில்லை,” என்று ரித்திகா ஸ்ரீ தனது ஆதங்கத்தையும் முன்வைத்தார். தற்போது அவர் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக வரலாறு படைத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது திருநங்கை புதிய பாதையை உருவாக்கியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
Next Post
ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை கையளிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு