Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

4 months ago
in செய்திகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரூபாயின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்களால் முறையான விநியோகத்தை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மருந்துகளை இறக்குமதி செய்ய விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

சில மருந்து வகைகளை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமும் இந்த தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

முக்கிய நோய்களுக்கான மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளதால், மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் மற்றும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் போன்ற நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

சில நோயாளர்கள் அதிக செலவு செய்து வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது சாதாரண மக்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிடாவிட்டால், சுகாதார சேவைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு