Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் விடயத்தில் தொடர்ந்து நல்லவனாக இருக்கமாட்டேன்; ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஈரான் விடயத்தில் தொடர்ந்து நல்லவனாக இருக்கமாட்டேன்; ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

புயல் வரு​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது என்று ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமுலில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று (30) ஒரு புகைப்​படத்தை பதி​விட்​டார். அதில் அவர் கையில் அதிநவீன துப்​பாக்​கி​யுடன் நிற்​கிறார். மலை சூழ்ந்த பின்​புறத்​தில் வெடிகுண்​டு​கள் வெடித்​துச் சிதறுகின்​றன.

இந்த புகைப்​படத்​துடன் அதிபர் ட்ரம்ப் வெளி​யிட்ட பதி​வில், “அணு சக்தி தொடர்​பான ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட ஈரான் தொடர்ந்து மறுத்து வரு​கிறது. அந்த நாடு விரை​வில் புத்​தி​சாலித்தன​மான முடிவை எடுக்க வேண்​டும். இனிமேல் பொறுமை காக்க முடி​யாது. தொடர்ந்து நல்​ல​வ​னாக இருக்க மாட்​டேன்” என்று தெரி​வித்​தார்.

சில மணி நேர இடைவெளி​யில் அவர் வெளி​யிட்ட மற்​றொரு பதி​வில், ”புயல் வந்து கொண்​டிருக்​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது” என்று தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது, ஈரான் மீது மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்த அமெரிக்க இராணுவம் தயா​ராகி வரு​கிறது. குறிப்​பாக ஈரானின் எரிசக்தி நிலை​யங்​கள் மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.

ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்​பற்​ற​வும் வியூ​கம் வகுக்​கப்​பட்டு இருக்​கிறது. ஈரானில் தரை​யிறங்கி அந்த நாட்​டில் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை பறி​முதல் செய்​ய​வும் ரகசிய திட்​டம் தீட்​டப்​பட்டு இருக்​கிறது. இதுதொடர்​பாக அமெரிக்க ராணுவ தளப​தி​கள் அதிபர் டொனால்டு ட்ரம்​பிடம் விரி​வான ஆலோ​சனை நடத்தி உள்​ளனர். இதை சுட்​டிக்​காட்​டும் வித​மாகவே புயல் வந்து கொண்​டிருக்​கிறது என்று ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இவ்​வாறு அந்த வட்டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

ட்ரம்ப், புதின் பேச்​சு​வார்த்தை ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்பாஸ் அராக்சி அண்​மை​யில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேசி​னார். இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் புதினும் நேற்று முன்​தினம் தொலைபேசி​யில் ஈரான் விவ​காரம் குறித்து ஆலோ​சித்​தனர். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப், வாஷிங்​டனில் நேற்று நிருபர்​களிடம் கூறும்​போது, “ஈரானிடம் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் விவ​காரத்​தில் ரஷ்யா உதவி செய்​யும் என்று அதிபர் புதின் வாக்​குறுதி அளித்​தார்.

அவரது உதவியை ஏற்​றுக் கொள்ள தயா​ராக இருக்​கிறோம். உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்​பாக​வும் அதிபர் புதினுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தினேன்” என்றார். ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ், நேற்று நிருபர்​களிடம் கூறும்​போது, “ரஷ்​யா​வின் வெற்றி தினமான மே 9-ம் தேதி ரஷ்​யா, உக்​ரைன் போர் நிறுத்​தம் குறித்த அறி​விப்பு வெளி​யாகும் என்று ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகி வரு​கின்​றன. இவை வெறும் ஊகங்​கள் மட்​டுமே. ஈரானின் அணு சக்தி திட்​டம் தொடர்​பாக ரஷ்ய தரப்​பில்​ எந்​தவொரு பரிந்​துரை​யும்​ அமெரிக்​கா​விடம்​ அளிக்​கப்​பட​வில்​லை” என்​று தெரிவித்​தார்​.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.