Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு; வடக்கு ஆளுநர் வலியுறுத்து

மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு; வடக்கு ஆளுநர் வலியுறுத்து

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மெரிட் அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

அனைத்துப் பரீட்சார்த்திகளிலிருந்தும் பல்கலைக்கழக நுழைவுச் சதவீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் பெற்றுள்ள முதலிடத்தைத் தக்கவைப்பதற்கு அப்பால், அந்த அடைவு மட்டத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி, விளையாட்டு, பண்பாட்டுத் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

அத்துடன், மத்திய கல்வி அமைச்சின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரங்களும் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் ஆளுநரால் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுப் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

மாகாணம் முழுவதுமான ஆளணிப் பரம்பலைச் சீராக்கும் நோக்கில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.

இக்கொள்கை தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அடுத்த ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களைப் புதிய கொள்கையின் ஊடாகவே நடைமுறைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் வரை அவர்களது தனிப்பட்ட கோவைகளை இற்றைப்படுத்தாது நிலுவையில் வைத்திருக்கக் கூடாது எனவும், அவற்றை உரிய காலத்தில் இற்றைப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அதேவேளை, நிலுவையில் உள்ள விசாரணைகள் காரணமாக எவருக்கும் ஓய்வூதியம் தாமதமாகும் நிலை ஏற்படக்கூடாது எனவும், விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் திட்டவட்டமாகப் பணிப்புரை விடுத்தார்.

உயர்தர மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் உரிய காலத்தில் பூர்த்தி செய்யப்படாமை பெரும் பின்னடைவாக உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை ஒழுங்குபடுத்துவதுடன், இறுதிக்கட்டத் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகளுடன் மாணவர்களுக்கான ‘இசட்’ புள்ளியையும் கணிப்பிட்டு வெளியிடுவதன் ஊடாக அடைவு மட்டத்தை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

இதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் கல்வி அதிகாரிகளைப் பணித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
Next Post
தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கும்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு