கெக்கிராவ கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்ப தகவல்களின் படி, குறித்த இளைஞர் குளத்தில் படகு ஓட்டிச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








