சட்டமன்ற பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற ஜோசப் விஜயை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அன்புடன் கட்டியணைத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, ஜோசப் விஜய் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
பின்னர், மு.க. ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
சந்திப்பு நிறைவடைந்ததையடுத்து, முதல்வர் ஜோசப் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.








