Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தையிட்டி வீதி விவகாரம் – “சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்க முயற்சி”; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தையிட்டி வீதி விவகாரம் – “சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்க முயற்சி”; சுமந்திரன் குற்றச்சாட்டு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்திற்குள் உள்ள வலி வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கையை தடுக்க முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த வீதியை மீட்கும் நடவடிக்கையை வலி வடக்கு பிரதேச சபை முன்னெடுத்து வரும் நிலையில், அதனை கைவிடுமாறு பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போது வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகினார்.

வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பிரதேச சபைக்கு சொந்தமான வீதி மறிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை சட்டப்படி அகற்ற பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த வீதியை மீட்டால் சமாதான சீர்குலைவு ஏற்படும் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை தடுக்காமல், அதற்கு இடையூறு செய்பவர்களுக்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

மேலும், “வீதியை தடுத்து வைத்திருப்பவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சமாதான சீர்குலைவு ஏற்படும் என தெரிவிக்கின்றனர். அப்படியானால் சமாதான சீர்குலைவை ஏற்படுத்தப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது” என்றும் அவர் கூறினார்.

சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பவர்களை தடுக்காமல், சட்ட மீறல்களை தடுக்க பொலிஸார் செயற்பட வேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
84% மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்; சுகாதார அமைச்சு

84% மக்கள் கண்தானத்திற்கு விருப்பம்; சுகாதார அமைச்சு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு