திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனவழிப்பிலிருந்து உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தது.
காயத்திரி கிராமத்திலுள்ள கௌரி அம்மன் கோவில் முன்ற்லில் கஞ்சி காச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராசா துசானந்தன் அவர்களது ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.















