Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை சிங்கள கிராமத்தினூடாக சென்றதினாலேயே கஜேந்திரன் தாக்கப்பட்டார்; கம்மன்பிலவின் இனவாத கருத்து!

திருகோணமலை சிங்கள கிராமத்தினூடாக சென்றதினாலேயே கஜேந்திரன் தாக்கப்பட்டார்; கம்மன்பிலவின் இனவாத கருத்து!

3 years ago
in செய்திகள்

கிழக்கில் சிங்களக் கிராமம் ஒன்றின் ஊடாக புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து வாகனப் பேரணியை முன்னெடுத்திருப்பது இனவாதத்தைத் தூண்டி, மக்களை குழப்பும் சூழ்ச்சி நடவடிக்கையாகும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் திலீபனின் நினைவு ஊர்தி மற்றும் கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலிகள் இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். புலிகள் அமைப்பின் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனமொன்றில் திலீபனின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வடக்குக்குப் பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கியது யார்? எவரேனும் அதிகாரி அனுமதி வழங்கி இருப்பாரானால் அவர் நாட்டின் அரசமைப்பை அப்பட்டமாக மீறியவராகக் கருதப்படுவார்.

அதேபோல அதிகாரிகளுக்கு அரசியல்வாதி எவரேனும் இது சம்பந்தமாக ஆலோசனை வழங்கியிருந்தால் அவரும் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவேண்டும். புலிகள் அமைப்பு அப்பாவி சிங்கள மக்களை இலக்கு வைத்து 300 க்கும் மேற்பட்ட பயங்கர வாதத்தாக்குதல்களை நடத்திய அமைப்பாகும்.

புலிகளின் தாக்குதல்களால் தமது உறவுகளின் எவரேனும் ஒருவரை சிங்களச் சமூகம் இழந்திருக்கும். எனவே, அவ்வமைப்பு மீது சிங்கள மக்களுக்கு எதிர்ப்பு, வைராக்கியம், கோபம் இருப்பது இயல்பே.

இவ்வாறானதொரு பின்புலத்தில் புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவு கூர்ந்து, கிழக்கில் சிங்களக் கிராமம் ஒன்றின் ஊடாக வாகனப் பேரணியை முன்னெடுத்திருப்பது இனவாதத்தைத் தூண்டி, மக்களை குழப்பும் சூழ்ச்சி நடவடிக்கையாகும்.

மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்து செயற்பட்டதில் தவறு இருக்கலாம். ஆனால், மக்களைக் குழப்பும் வகையில் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிலிருந்தே சட்டம் செயற்படத் தொடங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கு தென்கொரியா ஆதரவு!

ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கு தென்கொரியா ஆதரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு