வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதி எனுன் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை துறைமுகத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஆற்றில் படகில் இருந்த நபரொருவர் வியாழக்கிழமை காணாமல் போயிருந்தார்.
காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் வெள்ளிக்கிழமை (15) கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு ஜனாஸாவாக மீட்கப்பட்டவர் செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய முகம்மது சாலி முகம்மது ஜிஹாத் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








