உலக சுகாதார ஸ்தாபனம், வருடாந்தம் செப்டெம்பர் 17 ஆம் திகதி உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை
அனுஷ்டித்து வருகின்றது. இந்நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைஉத்தியோகஸ்தர்களால்
உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் க. புவனேந்திரநாதன்
தலைமையில், வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான நடைபவனி, பட்டிருப்பு வீதியூடாகச் சென்று,
எருவில் கிராமத்தினூடாக மீண்டும் வைத்தியசாலையைவந்தடைந்தது.
இவ்வருடத்தின் கருப்பொருளாக, நோயாளர் பாதுகாப்புக்காக நோயாளரை ஈடுபடுத்துவதுடன்
நோயாளரின் குரலைஉயர்த்துவோம்’ என்பது அமைந்திருந்தது.