Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

55 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த மூன்று அமெரிக்க அதிகாரிகள், தாக்குதல்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் இராணுவ வளங்களைப் பாதுகாக்கும் தற்காப்பு நடவடிக்கையாகவே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விமானம் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானின் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் பாதுகாப்பு ஏவுகணைகள் அமெரிக்க இராணுவ வளங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்ததால், அவற்றை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதல் பாரிய அளவிலான போர் நடவடிக்கையாகக் கருதப்படக்கூடாது என்றும் அமெரிக்க தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முந்தைய நாள் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் ஈரான் தொடர்பான பிராந்திய பதற்றம் இன்னும் முழுமையாகத் தணியவில்லை என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!
செய்திகள்

கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!

November 3, 2026
பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!
செய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!

November 3, 2026
வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!
செய்திகள்

வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!

November 3, 2026
திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்
செய்திகள்

திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்

November 3, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்

November 3, 2026
கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
Next Post
வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!

வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு