Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த மாதம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்ய வேண்டும் என கனடா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

கனடாவின் ஒன்ராறியோ, வின்ட்சர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஹசன் ஹைதர் என்ற ஐந்து குழந்தைகளின் தந்தை, கடந்த ஏப்ரல் 10 அன்று லெபனானின் கானா கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு கனடா அரசு இஸ்ரேலிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தது. ஒரு கனடா பிரஜையின் மரணத்திற்கு வழிவகுத்த அனைத்துத் தகவல்களையும் நாங்கள் கோரி வருகிறோம் என தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என வெளிவிவகார அமைச்சுர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டை இஸ்ரேலே விசாரிக்கும் என்ற கனடா அரசின் நிலைப்பாட்டை ‘கனடா முஸ்லிம்களின் தேசிய கவுன்சில்’ திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

எனினும் “குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பு, தன் மீதுள்ள குற்றத்தையே விசாரிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. கனடா பிரஜை ஹசன் ஹைதர் ‘இறக்கவில்லை’, அவர் ‘கொலை செய்யப்பட்டுள்ளார்’.

இதற்கு உண்மையான நீதியும் பொறுப்புக்கூறலும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை நடுநிலையான ஒரு விசாரணை அமைப்பின் மூலம் கண்டறிய வேண்டும்.

ஹைதரின் கொலைக்குக் காரணமான இஸ்ரேலிய அதிகாரிகளிடமே இந்த விசாரணையை ஒப்படைத்தால், உண்மையான நீதி கிடைக்காது,” என அந்த அமைப்பு மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்
உலக செய்திகள்

ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்

September 10, 2026
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்

September 10, 2026
80 மில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; மருதானையில் ஒருவர் கைது!
செய்திகள்

80 மில்லியன் டொலர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; மருதானையில் ஒருவர் கைது!

September 10, 2026
இலங்கைக்கு IMF தூதுக்குழு வருகை; 7வது மதிப்பாய்வு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்
செய்திகள்

இலங்கைக்கு IMF தூதுக்குழு வருகை; 7வது மதிப்பாய்வு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

September 10, 2026
வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
Next Post
ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்; நூலக திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்; நூலக திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு