Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது-இருவர் தப்பி ஓட்டம்

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது-இருவர் தப்பி ஓட்டம்

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா வீடு ஒன்று மற்றும் அந்த பகுதியில் உள்ள களப்பு பகுதியில் (வாவியில்) சூட்சகமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களை நேற்று சனிக்கிழமை (23) முற்றுகையிட்ட பொலிசார் ஒரு பெண்ணை கைது செய்ததுடன் இருவர் தப்பி ஓடியதுடன் 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 75000 மில்லி லீற்றர் கசிப்பு பரல்கள் உட்பட உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த பகுதிகளில் உள்ள களப்புடன் உள்ள கண்ணா காடு பகுதிகளில் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியை செய்து, அங்கிருந்து தோணிகள் மூலமாக தாழங்குடா, மாவிலங்குத்துறை, கல்லடி, நாவற்குடா, மட்டு கருவப்பங்கேணி, போன்ற பிரதேசங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த சட்டவிரோத செயற்பாட்டு தொடர்பாக விசேட புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து பொலிஸ் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன தலைமையில் சம்பவ தினமான நேற்று காலையில் இரு குழுவினர் அந்த களப்பு பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன்போது களப்பில் உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 8 பரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை மீட்டனர்.

இதனை தொடர்ந்து இன்னும் ஒரு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதையடுத்து உற்பத்தியில் ஈடுபட்வர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் அங்கிருந்து பிளாஸ்ரிக் போத்தல்கள் கொண்ட 4 உரைப்பை மூடைகள், 08 ஊறல் பரல்கள் , 02 தோணிகள் என்பவற்றை மீட்டனர்.

அதேவேளை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முதலையிக்குடா பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இனைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்ட விரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மாவிலங்குதுறை தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவரை 75000 மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
Next Post
இலண்டனில் நிகழ்ந்த கோர விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

இலண்டனில் நிகழ்ந்த கோர விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு