உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (01) 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, WTI ரக மசகு எண்ணெயின் விலை 2.37 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 89.73 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 2.16 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 93.28 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு காரணமாகக் கருதப்படுகின்றன.








