அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (01) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், அதன் விற்பனை பெறுமதி 335.70 ரூபாவாக காணப்படுகிறது.
இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த 29ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இதன் மூலம், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதை அண்மைய நாணய மாற்று விகிதத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.








