Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சென்னையில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் உயிரிழப்பு; 7 பேர் கைது!

சென்னையில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் உயிரிழப்பு; 7 பேர் கைது!

3 months ago
in செய்திகள்

சென்னை கோயம்பேடு பகுதியில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதுடைய யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் ஊடாக சென்னை சேர்ந்த பெண் ஒருவருடன் நட்புறவு பேணி வந்துள்ளார்.

தனது தோழியைச் சந்திப்பதற்காக சென்னை சென்றிருந்த யான்சி, இரவு நேரத்தில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றபோது அங்கு மற்றொரு குழுவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இருதரப்பினரையும் கேளிக்கை விடுதியின் பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த யான்சி மீது, தகராறில் ஈடுபட்டிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கார் ஒன்றை வேகமாக மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோயம்பேடு பொலிஸார், பாலகுரு, சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரில் அரசியல் கட்சியொன்றின் கொடி கட்டப்பட்டிருந்ததும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் இடம்பெற்ற கேளிக்கை விடுதிக்கும் அதிகாரிகள் முத்திரையிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
வெலிக்கடையில் வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை; 24 வயதுடைய இருவர் கைது!

வெலிக்கடையில் வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை; 24 வயதுடைய இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு