தெமட்டகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 19 உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








