ஜூன் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்தும் 4,765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
மேலும், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,910 ரூபாயாகவும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 890 ரூபாயாகவும் தொடரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர விலை திருத்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் பின்னர், ஜூன் மாதத்திற்கான விலைகளை மாற்றமின்றி பேண தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.








