டெங்கு நுளம்பு ஒழிப்பை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் அறிவிப்பின்படி, 14 மாவட்டங்களில் அமைந்துள்ள 74 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை மையமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவும் அதிக அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து விசேட கண்காணிப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.








