Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆர்டெமிஸ் III திட்டம்; 4 விண்வெளி வீரர்களை அறிவித்தது நாசா

ஆர்டெமிஸ் III திட்டம்; 4 விண்வெளி வீரர்களை அறிவித்தது நாசா

5 days ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA), தனது அடுத்தகட்ட ஆர்டெமிஸ் III (Artemis III) திட்டத்திற்காக மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு இத்தாலிய விண்வெளி வீரரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விண்வெளிப் பயணம் சந்திரனில் தரையிறங்கும் திட்டமாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் மனிதர்களை சந்திரனின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லும் முக்கிய முயற்சிகளுக்கான சோதனைப் பயணமாகக் கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த ஆய்வுப் பயணத்தில், பூமியின் சுற்றுப்பாதையில் இரண்டு விண்கலங்களை ஒன்றிணைக்கும் (Docking) முக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார்ஷிப்’ (Starship) மற்றும் புளூ ஒரிஜின் நிறுவனத்தின் ‘புளூ மூன்’ (Blue Moon) ஆகிய சந்திரனில் தரையிறங்கும் விண்கலங்கள் முதல்முறையாக விண்வெளியில் சோதனை செய்யப்பட உள்ளன.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில், நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் இந்தப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார்.

அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரே டக்ளஸ், பிராங்க் ரூபியோ, ரேண்டி ப்ரெஸ்னிக் ஆகியோருடன், ஐரோப்பிய விண்வெளி முகமையைச் சேர்ந்த இத்தாலிய விண்வெளி வீரர் லூகா பார்மிட்டானோவும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

58 வயதான ரேண்டி ப்ரெஸ்னிக் இந்த விண்வெளிப் பயணத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பரிசோதனை விமானியான அவர், ஏற்கனவே மூன்று விண்வெளிப் பயணங்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் பல தசாப்தங்களுக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியை நாசா முன்னெடுத்து வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
பயங்கரவாத தடை சட்டம் & அனுர; விடுதலை செய்யவில்லை என்றால் போராட்டம்

பயங்கரவாத தடை சட்டம் & அனுர; விடுதலை செய்யவில்லை என்றால் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு