முன்னாள் அமைச்சரும் தொழிலதிபருமான தயா கமகே அவர்களுக்கு சொந்தமான Daya Group Limited மற்றும் Daya Apparel Export (Pvt) Ltd நிறுவனங்களின் அடமான சொத்துகளை ஏலமிடுவதற்கு மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
1.42 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 47.3 கோடி) கடனை செலுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், கடனை மீட்க வங்கிக்கு சட்டபூர்வ உரிமை இருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மனுதாரர்கள் ரூ.10 இலட்சம் செலவுத் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.








